Haiku Poesy #39

Haiku Poesy #39

உன் அலைபேசி எண்ணும் கிடைத்தது கட்டுப்பாடுகளும் கிடைத்தது..!

நூறு குறுஞ்செய்தி வைத்து எண்ணி எண்ணி அனுப்பினேன்..!

ஒரு வரி பேச்சின் அழைப்பிற்காக
நாட்பொழுதுகளை கடந்தேன்..!
ஆனால் கிடைத்தது உன் ஹஸ்கி குரல்.
அலைபேசி மற்றும் காதிற்கும் மைக்ரோமீட்டர் இடைவெளி கூட இல்லாத போதும் உன் மெல்லிய குரல் என்னை போதையில் ஆழ்த்தியது..!

இன்றைய சுதந்திர நரகத்தை விட அந்நாள் சொர்கதிற்காகவே மனம் எங்குகிறது..!

0 Comments